தரகம்பட்டி கோயில் கும்பாபிஷேகத்திற்கு காவிரியிலிருந்து தீர்த்த குடம்

கடவூர், டிச.11:  தரகம்பட்டி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் குடம் யானையின் மீது கொண்டுவரப்பட்டது.

தரகம்பட்டி  விநாயகர், மாரியம்மன்,  பகவதியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் குடம் கொண்டு வந்து பகவதியம்மன் கோயில் நிலத்திலிருந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முளங்க அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீரெங்கம் யானைகள், பசு மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள் மீது தீர்த்தம் வைக்கப்பட்டு வான வேடிக்கையுடன்  ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. யானையின் மீது  ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் பரம்பரை பூஜா ஸ்தானீகர் சுவாமிநாதர் சிவாச்சாரியார் அமர்ந்து தீர்த்தக் குடம் வைத்து அழைத்து வந்தார். நிகழ்ச்சியில் சோழிய வெள்ளாளர் சங்கதலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மற்றும் மலைக்கொழுந்தா பிள்ளை, ஊர் கவுண்டர் மாரியப்ப பிள்ளை, சோழிய வெள்ளாளர் பெரியதனம் பெரியசாமி பிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: