கால்வாய் பள்ளத்தில் டீக்கடை சரிந்து விழுந்தது கடலூர், டிச. 11: கடலூர் முதுநகரில் இருந்து

ஆல்பேட்டை வரை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக நேற்று பள்ளம் தோண்டிய போது சாலையோரத்தில் இருந்த டீக்கடை அப்பள்ளத்தில் சரிந்து விழுந்தது. கடலூர் இம்பீரியல் சாலையில் துணிக்கடை, நகைக்கடை அருகில் கடலூர் எஸ்.என் சாவடியை சேர்ந்த சங்கர்(40) என்பவர் உணவு விடுதியுடன் கூடிய டீக்கடையை நடத்தி வருகிறார். அவரது கடையை ஒட்டி கடந்த இரு மாதங்களுக்கு முன் கால்வாய் வெட்ட பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது டீக்கடை கட்டிடம் ஆட்டம் கண்டது. உடனே பணி நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து அக்கட்டிடத்திற்கு பாதிப்பு வராமல் சற்று தள்ளி பள்ளம் தோண்டுவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் கூறிசென்றதாக தெரி

கிறது.இந்நிலையில் நேற்று மதியம் அங்கு வந்த சிலர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கடையை ஒட்டி பள்ளம் தோண்டினர்.

திடீரென அந்த பள்ளத்தில் டீக்கடை சரிந்து விழுந்தது. அப்போது உள்ளே மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் தட்டு தடுமாறி கீழே விழுந்து அங்கிருந்து தப்பினர். டீக்கடை பொருட்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பள்ளத்தில் சரிந்து விழுந்தது.கால்வாய் கட்டுபவர்களின் அலட்சியத்தால் கடை பாதிக்கப்பட்டதாக கூறி கடை உரிமையாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனர்.  மேலும் அவர்கள் உடைந்த கடையை சீரமைக்கவும் வலியுறுத்தினர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: