புதுவை அணிக்கு 2வது வெற்றி

புதுச்சேரி, டிச. 11:  கேரள மாநிலம் வயநாடு மைதானத்தில் நடந்த ரஞ்சிக்கோப்பை போட்டியில் சிக்கிம் - புதுவை அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய புதுவை அணி 157 ஓவர் 8 விக்கெட் இழப்புக்கு 647 ரன் எடுத்தது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக டோக்ரா 253 ரன் குவித்தார். பின்னர் களமிறங்கிய சிக்கிம் அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவரில் 244 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிக்கிம் அணி 403 ரன் பின் தங்கியதால் பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய சிக்கிம் அணி 75.5 ஓவரில் 241 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் புதுவை அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் சிக்கிமை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக டோக்ரா தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: