திருச்செங்கோட்டில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா

திருச்செங்கோடு, டிச.11: திருச்செங்கோட்டில், சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கைலாசநாதர் கோயிலில் சிறப்பு அபிசேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. நகர காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் அண்ணாமலை, ராமசாமி, தங்கராஜ், காசிவிஸ்வநாதன், கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.

Related Stories: