பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில் புயல் நிவாரண பொருட்கள் வழங்கல்

ராசிபுரம், டிச.11: புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில், நிவராண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  

பாவை கல்வி நிறுவனங்கள் மற்றும் பாவை பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் சார்பில் பட்டுக்கோட்டை தாலுகா, தாம்மரங்கோட்டை கிராமத்திற்கு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் ராமசாமி,  அனைத்து கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட பங்களிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, கோதுமை மாவு, ரவை, கொசுவர்த்தி, பற்பசை, துண்டுகள், தார் பாய்கள் உள்ளிட்ட நிவராண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.   இவர்களை கல்வி நிறுவனங்களின் தலைவர், தாளாளர் வழியனுப்பி வைத்தனர். மாணவர்களுடன் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரத்னக்குமார், சரவணன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சென்றனர்.

Related Stories: