எருமப்பட்டி ஒன்றியத்தில் ₹84 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்

சேந்தமங்கலம், டிச.11:  எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ₹84 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டியில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம், பவித்திரம் ஊராட்சியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம், பவித்திரம்புதூர் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, நவலடிப்பட்டி வண்ணான்குட்டையில் சமுதாய கூடம், வசந்தபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பணிகள் ₹84 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழாவுக்கு கலெக்டர் ஆசியாமரியம் தலைமை தாங்கினார்.  சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன், எம்பி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் நாமக்கல் ஆர்டிஓ கிராந்திகுமார்பதி, ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், வரதராஜன் பேரூர் செயலாளர் பாலுசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பட்டுபத்மநாபன், செயல் அலுவலர் இளங்கோ, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: