2019ம் ஆண்டை வரவேற்க 2019 பனைவிதை நடும் விழா

காரைக்குடி, டிச. 11: காரைக்குடி விதியாகிரி கல்வி குழுமம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல்ஸ் சங்கமம் சார்பில் கோவிலூர் பெரிய ,கண்மாய் அரியக்குடி கண்மாய், இடையன்வயல் கண்மாய் மற்றும் இலுப்பகுடி புதுவெட்டு கண்மாய் உட்பட பல்வேறு கண்மாய்களில் 2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2019 பனைவிதை நடவு செய்யப்பட்டது. கோவிலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் என 700 மாணவர்கள் கலந்து கொண்டு பனைவிதைகளை நட்டனர்.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ் மணிமாறன் வரவேற்றார். அப்பலோ டாக்டர் திருப்பதி தலைமை வகித்தார். கோவிலூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், அரியக்குடி பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கர், விதியாகிரி பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், மண்டல தாசில்தார் ஈஸ்வரி, கோவிலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அழகப்பன், எஸ்எம்எஸ்வி பள்ளி தலைமையாசிரியர் வள்ளியப்பன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் காரைமுத்துக்குமார், வித்யாகிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஹென்றிபாஸ்கர், ராமநாதன் செட்டியார் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழாசிரியர் செயம்கொண்டான் நன்றி கூறினார்.

Related Stories: