அனுமதியின்றி மஞ்சு விரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்புத்தூர், டிச.11: திருப்புத்தூர் தம்பிபட்டியில் அனுமதியின்றி நடந்த வடமாடு மஞ்சு விரட்டிற்கு முழு பாதுகாப்பு வழங்கிய போலீசாரே நடத்திய 5 பேர் மீது நேற்று வழக்குப்பதிவும் செய்துள்ளனர். திருப்புத்தூர் தம்பிபட்டியில் நேற்று முன்தினம் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பல கிராமங்களை சேர்ந்த 14 காளைகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சு விரட்டை பல கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் காண வந்திருந்தனர்.

அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட வடமாடு மஞ்சு விரட்டிற்கு திருப்புத்தூர் டவுன் போலீசார் 4 எஸ்.ஐ.க்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.இந்நிலையில் அரசு அனுமதியின்றி வடமாடு மஞ்சு விரட்டு நடத்தியதாக கூறி தம்பிபட்டியைச் சேர்ந்த பாண்டிகண்ணன்(24), செல்வம்(35), வினோத்குமார்(26), மாரீஸ்(28), விகனேஷ்(28) ஆகிய 5 பேர் மீது திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: