டி.கல்லுப்பட்டியில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

பேரையூர், டிச. 11: பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் சின்னசிட்டுலொட்டி கிராமம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த கிராமமக்கள் அருகில் உள்ள கோபால்சாமி மலைப்பகுதியிலுள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து வந்தனர். மேலும் இந்த கிராமத்திலுள்ள பழைய ஆழ்துளைகிணறு போர்வெல் போடப்பட்டு தண்ணீர் சப்ளை செய்த மோட்டார் பழுதானது. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்களில் குடிநீரை அருகில் உள்ள கிராமங்களில் பிடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த கிராமபொதுமக்கள் குடிநீர் வழங்ககோரி காலிக்குடங்களுடன் டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து யூனியன் ஆணையாளர்கள் பிரகாஷ், கலைச்செல்வம், ஆகியோர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்கள். குடிநீர் பிரச்னை சில தினங்களில் முழுமையாக தீர்த்துவைக்கப்படும். அழவரை குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: