உடுமலையில் கிடப்பில் கிடக்கும் ரவுண்டானா பணி

உடுமலை, டிச. 11: உடுமலை நகரில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 2வது பெரிய நகராக உடுமலை உள்ளது.

கோவையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் உடுமலை வழியாக செல்கின்றன. விரைவு பஸ்களும், கனரக வாகனங்களும் செல்கின்றன. பழனி போன்ற கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான வாகனங்கள் உடுமலை வழியாக செல்கின்றன. இதனால் உடுமலை பேருந்து நிலைய பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. விபத்து தடுக்கவும், போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் பேருந்து நிலையம் அருகே உடுமலை ரோடு, பழனி ரோடு, ராஜேந்திரா ரோடு சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு நெடுஞ்சாலை துறை சார்பில் இதற்கான அளவீட்டு பணி நடந்தது. ஆனால் அளவீடு முடிந்து ஓராண்டாகியும் இன்னும் ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. எனவே, உடுமலையில் விரைவாக ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: