திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது வார்டில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு

திருப்பூர், டிச.11:  திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது வார்டில் குடியிருப்பு பகுதிகளில் குப்பை  கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  உதவி கமிஷனரிடம் தமிழ் மாநில  காங்கிரஸ் கட்சி மனுகொடுத்தனர்.இது குறித்து தமிழ்மாநில காங்கிரஸ்  கட்சியின் மாவட்ட தலைவர் ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயமுத்துசாமி  ஆகியோர் கமிஷனரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. திருப்பூர்  மாநகராட்சி முதலாம் மண்டலத்திற்கு உட்பட 2 வது வார்டில் 5 ஆயிரத்துக்கு  மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

அந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க  மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குப்பை கிடங்கு  அமையும் பட்சத்தில்,  அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு டெங்கு, மலேரியா  போன்ற விஷ காய்ச்சல்கள் ஏற்படும் நிலை உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம்  மாற்று இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க

வேண்டும். பொது இடத்திலுள்ள   முட்புதர்களை அகற்ற வேண்டும். இதை செய்ய மறுக்கும் பட்சத்தில் தமாகா  சார்பில் 1வது மண்டல அலுவலகம் முன்பு காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்க   முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: