மானாவாரி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு

ஈரோடு, டிச. 11:  ஈரோடு வேளாண் உதவி இயக்குநர் (மத்திய திட்டங்கள்) சாமுவேல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டத்திற்கு குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரம் ஹெக்டேர் கொண்ட மானாவாரி நில விவசாயிகளை குழுவாக கொண்டு உருவாக்க வேண்டும். இதற்கு உழவு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.1,250, விதை மானியம், உயிர் உர மானியம், வேளாண் கருவி என பல்வேறு உதவிகள் வழங்கப்படும்.    கடந்த ஆண்டு இந்த திட்டம் அம்மாபேட்டை, பவானி, நம்பியூர், டி.என்.பாளையம், பெருந்துறை, சென்னிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஆயிரம் ஹெக்டேருக்கு குழு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கோபி, நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலமாக மக்களாசோளம், நிலக்கடலை, எள், துவரை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிது. கடந்த ஆண்டு பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு மூலமாக நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைத்தது. மூன்று ஆண்டுகள் கொண்ட இந்த திட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் இதேபோன்ற குழு கூட்டமைப்பு உருவாக்கி மானாவாரி நிலத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: