அந்தியூர் அருகே கார் திருட்டு வழக்கில் மேலாளர் கைது

அந்தியூர், டிச. 11:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி, காமராஜர் வீதியை சேர்ந்தவர் திவாகர் (31). இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தில் ஈரோடு மாவட்ட கலெக்ஷன் மேனேஜராக, வேலை செய்து வந்தார். இந்த நிறுவனத்தில் கார் வாங்கி அதற்கான தவணை தொகையை செலுத்தாதவர்களிடம் இருக்கும் கார்களை பறிமுதல் செய்து, அதை முறையாக நிறுவனத்தில் ஒப்படைத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை, பங்களாபுதூர், கோபி, நெரிஞ்சிபேட்டை மற்றும் திருப்பூர் ஆகிய 5 பகுதியை சேர்ந்தவர்கள் காரை வாங்கி விட்டு தவணை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 5 கார்களை பறிமுதல் செய்துள்ளார். ஆனால் திவாகர் அந்த கார்களை கோவையில் உள்ள நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் 5கார்களுடன் தலைமறைவாகிவிட்டார்.

இதனையடுத்து கோவையில் உள்ள நிறுவனம் சார்பில் ஆப்பக்கூடல் போலீசில் அளித்த புகாரின் பேரில், ஆப்பக்கூடல் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வழங்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து தலைமறைவான திவாகரை கடந்த மூன்று மாதமாக தேடி வந்தனர். இந்நிலையில் திவாகர் சொந்த ஊரான அத்தாணி வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் திவாகரனை கைது செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories: