பவானியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

பவானி, டிச. 11: பவானியில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் பெண் சிசு கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.பவானி அரசு மருத்துவமனை ஜம்பை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஜம்பை எஸ்.எஸ்.எம்., பார்மசி காலேஜ் இணைந்து நடத்திய இந்த ஊர்வலத்துக்கு தலைமை மருத்துவ அதிகாரி கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கிருத்திகா, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பூரணசந்திரிகா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

பவானி தாசில்தார் சேவியர் சகாய பிரபு கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார். பவானி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது. ஊர்வலத்தில் எய்ட்ஸ் நோய், பெண் சிசு கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை மருந்தியல் கல்லூரி மாணவ, மாணவியர் கைகளில் ஏந்தி, விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், எஸ்எஸ்எம்., பார்மசி கல்லூரி முதல்வர் சங்கமேஸ்வரன், சுகாதார ஆய்வாளர்கள் சேது, பாலன், ஜெயப்பிரகாஷ்,  மாவட்ட காசநோய் திட்ட கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர் துரைசாமி, காசநோய் திட்ட சிகிச்சை மேலாளர் பாலசுப்பிரமணியம், நம்பிக்கை மைய ஆலோசகர்கள் ரஞ்சித்குமார், சுமன், பிரேம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: