நாமக்கல்லில் புதியதாக தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம்

நாமக்கல், டிச.7: நாமக்கல்லில், புதியதாக தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு பணிகளை ஒருங்கிணைக்க, புதியதாக அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்-மோகனூர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஏற்கனவே மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

புதிய அலுவலகத்தை நாமக்கல் மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் (பொ) சுரேஷ்ராஜா குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இந்த அலுவலகத்துக்கு ஒரு கண்காணிப்பாளர் உள்பட 10 அலுவலர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுத்துறை இயக்குனரின் நேரடி கட்டுப்பாட்டில், இந்த அலுவலகம் செயல்படும். இதற்கு முன் கோவை மண்டல அளவில் தேர்வுத்துறை துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது அனைத்து  மாவட்டங்களிலும் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்த புதிய அலுவலகம் அமைந்துள்ளது. அரசு தேர்வுகள் தொடர்பான பணிகளை மட்டும் இந்த அலுவலகம் கவனிக்கும்.

Related Stories: