பாபர் மசூதி இடிப்பு கண்டித்து கிருஷ்ணகிரியில் எஸ்டிபிஐ, தமுமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, டிச.7: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரியில் எஸ்டிபிஐ, தமுமுக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரியில், மாவட்ட எஸ்டிபிஐ சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியை கட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஷபியுல்லா வரவேற்றார். ஷாஹி மஸ்ஜித் தலைவர் முஷ்டாக்அகமத், சௌக் மஸ்ஜித் செயலாளர் சாப்ஜான், பூரா மஸ்ஜித் துணைத்தலைவர் காதர்உசேன், மஸ்ஜிதே அக்ஸா தலைவர் ஷாபுத்தீன், பிஎப்ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏஜாஸ், தி.க மாவட்ட செயலாளர் மாணிக்கம், ஜம் இய்யத் உலமா மாவட்ட துணைத் தலைவர் நசீர்நத்வி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வர்த்தகரணி தலைவர் முபாரக், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகசுப்பிரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் ஷனாவுல்லா, முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் தளபதி ரகமத்துல்லா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஷப்பீர்அகமத், பிஎப்ஐ மாநில பேச்சாளர் முகமதுஜர்ஜிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சலாமத் ஆகியோர் ண்டனவுரையாற்றினர்.

 

போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கனியமுதன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜேசு துரைராஜ், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஷபியுல்லா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சௌகத்அகமத் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.தமுமுக சார்பில், கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நூர்முகமது தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், தமுமுக முன்னாள் மாவட்ட தலைவர் சுல்தான், மாவட்ட பொருளாளர் ஜாவித், மாவட்ட துணை செயலாளர்கள் தாஜூத்தீன், யாசின் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வாகித்பாஷா வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சியின் வணிகர் சங்க மாநில செயலாளர் மதுரை காதர் மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை ஹசன் ஆகியோர் பேசினர்.

கிருஷ்ணகிரி டவுன் கமிட்டி தலைவர் இர்பானுல்லா ஹூசைனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி துறை தலைவர் ஆறுமுகசுப்பிரமணி, பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது பாபர் மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நகர தலைவர் பைரோஸ் நன்றி கூறினார்.தமுமுக சார்பில், ஓசூரில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏஜஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சான்பாஷா வரவேற்றார். மமக மாவட்ட செயலாளர் கலீல்பாஷா, பொருளாளர் சுபைர், துணை செயலாளர் பாஷா முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக பேச்சாளர் ஜைனுலாப்தீன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அல்தாப் அஹமத், திமுக முன்னாள் நகரமன்ற தலைவர் மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ராமச்சந்திரன், சிபிஐ ஆதில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர தலைவர் அப்துல்லாஷெரீப் நன்றி கூறினார்.

ஓசூரில், ஏஐஎம்ஐஎம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அசார் தலைமை வகித்தார். நகர பொதுச்செயலாளர் வாசிம் வரவேற்றார். மாநில செயலாளர் இம்தியாஸ் சிறப்புரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் அமீனுல்லா, ரியாஸ், காஜா, அமீன், சையத்யூனஸ், இப்ராகிம், ரிஸ்வான், வாஜீத், ஆரிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் ஆசிப் நன்றி கூறினார்.

Related Stories: