வெண்ணம்பள்ளியில் திம்மராயசுவாமி கோயில் கும்பாபிஷேகம் 9ம் தேதி நடக்கிறது

கிருஷ்ணகிரி, டிச.7: வெண்ணம்பள்ளியில் 9ம் தேதி திம்மராயசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

பர்கூர் தாலுகா வெண்ணம்பள்ளி கிராமத்தில் திம்மராயசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. விழாவினையொட்டி, இன்று(7ம் தேதி) காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி, திக்பாலக பூஜை, கங்கணம் கட்டுதல், அங்குரார்ப்பணம், கொடியேற்றுதல், கலசஸ்தாபனம், முதல் கால யாகவேள்வி, பூர்ணாகுதி, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு 2ம் கால யாகவேள்வி, மங்களாரத்தி, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

நாளை(8ம் தேதி) காலை 3ம் கால யாகவேள்வி, இரவு 4ம் கால யாகவேள்வி, அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 9ம் தேதி காலை 5 மணிக்கு சுப்ரபாத சேவை, 5ம் கால யாகவேள்வி, காலை 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, கலச புறப்பாடு நிகழ்ச்சியும், மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம், தீர்த்தப்பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வெண்ணம்பள்ளி கிராம பொதுமக்கள் மற்றும் கும்பாபிஷேக விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: