பாஜ நிர்வாகி பிறந்த நாள் விழா

ஓசூர், டிச.7: ஓசூரில், பாஜ மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஓசூரைச் சேர்ந்தவர் நாகராஜ். பாஜ இளைஞரணி செயலாளரான இவர், தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். முதலில் தனது தாயாரிடம் ஆசி பெற்றார். பின்னர், தனது தந்தை சமாதிக்கு சென்று வணங்கினார். தொடர்ந்து ஓசூர் சந்திரசூடேஸ்வரர், கோட்டை மாரியம்மன், வரசித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், ஆதரவாளர்கள் வழங்கிய அன்னதானத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக 30 வார்களிலும் ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார். மேலும், மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கினார். நிகழ்ச்சியில் முருகன், பிரவீன்குமார், கோபிநாத், கார்த்திக், கிரண், கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: