இயற்கை விவசாயம் விளக்க பயிற்சி

தேன்கனிக்கோட்டை, டிச.7: தளி வட்டார வேளாண்மைத்துறை மற்றும் கிருஷ்ணகிரி உழவர் பயிற்சி நிலையம் சார்பில் மாருப்பள்ளி கிராமத்தில் இயற்கை விவசாயம் தொடர்பாக விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.முகாமிற்கு வேளாண் துணை இயக்குநர் பிரதிப்குமார்சிங் தலைமை வகித்து, இயற்கை விவசாயம் குறித்து விளக்கி கூறினார். வேளாண் உதவி இயக்குநர் சண்முகம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி எடுத்துக் கூறினார். பேராசிரியர் முகமது அலாவுதீன், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளும் முறை குறித்து விளக்கி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன்தசரூபன் மானாவாரி மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் நாத் செய்திருந்தார்.

Related Stories: