பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.7:  பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தர்மபுரியில் மனிதநேய மக்கள் கட்சியினர்  கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்து, பிஎஸ்என்எல் அலுவலகம் முன் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்ட தலைவர் தென்றல் யாசின் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் நவாப்ஜான் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு, திக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் இளையமாதன், மதிமுக தங்கராஜ், சிபிஎம் குமார், சிபிஐ தேவராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நந்தன், ஜெயந்தி ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், சலீம், ரியாஸ்குமார், நஜிர்அகமத், ரபிக்ஜான், ஜலீல், இர்பான், நவுசாத், நிஜாமுத்தின், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பாலக்கோடு: பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் ஜாவித் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பேச்சாளர் ரவூப் நிஸ்தார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட அமைப்பார் விஜயகுமார், தவாக மாவட்ட தலைவர் மாது ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: