காஷ்மீர் ஆப்பிள் வரத்து அதிகரிப்பு கிலோ ₹80க்கு விற்பனை

தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டத்தில் காஷ்மீர் ஆப்பிள் வரத்து அதிகரித்து விற்பனை ஜோராக நடந்து வருகிறது.இந்தியாவில் காஷ்மீர், சிம்லா உள்ளிட்ட இடங்களில் ஆப்பிள் அதிகம் விளைகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் ஆப்பிள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் சிம்லாவில் ஆப்பிள் விற்பனை முடிந்து, தற்போது டெல்லி ஆப்பிள் என்று அழைக்கப்படும் காஷ்மீர் ஆப்பிள் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளது. சந்தைபேட்டையில் நேற்று ஒரு கிலோ ஆப்பிள் ₹80 முதல் ₹100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தர்மபுரியில் கடந்த இருமாதத்திற்கு முன் ஒரு கிலோ ஆப்பிள் ₹140 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் விலை சரிந்துள்ளது. சிம்லா ஆப்பிள் விற்பனை முடிந்து, தற்போது காஷ்மீர் ஆப்பிள் விற்பனை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆப்பிள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மாவட்டத்தில் தினசரி 10 டன் ஆப்பிள் விற்பனையாகிறது,’ என்றனர்.

Related Stories: