பாபர் மசூதி இடிப்பை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, டிச.7: சிவகங்கை அரண்மனைவாசல் முன் எஸ்டிபிஐ கட்சி சார்பில் டிச.6 தினத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். மசூதியை அதே இடத்திலேயே கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முகமதுகாலித் தலைமை வகித்தார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் ஜலாலுதீன் முன்னிலை வகித்தார். பெண்கள் பிரிவு மாநில தலைவி நஜ்மாபேகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில் மாவட்ட பொது செயலாளர் சாதிக்பாட்ஷா, நகர செயலாளர் ரியாஸ், விடுதலை சிறுத்தைகள் சார்பில் மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலையா சிவகங்கை நகர செயலாளர் மூக்கையா பெரியசாமி, காளையார்கோவில் நகர செயலாளர் வெற்றி விஜயன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருப்புத்தூர் அண்ணாசிலை அருகே நேற்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.மு.மு.க. மாவட்டத் தலைவர் துல்கர்ணைசேட் தலைமை வகித்தார். மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் அப்ரார் அகமது, கண்டன உரையாற்றினார்.

திராவிடர் கழக தலைமை பேச்சாளர் என்னரசு பிராட்லா, மாவட்ட தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் சாக்ளா, மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் கான்முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சின்னத்துரை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் ஹைதர்அலி அம்பலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: