பாபர் மசூதி இடிப்பு தினம் ராமநாதபுரம், தொண்டியில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், டிச.7:  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம், தொண்டியில் எஸ்டிபிஐ மற்றுமட் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். பாபர் மசூதி இடிப்பை வழக்கை விரைந்து முடித்தல், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அகற்றுதல், மீண்டும் மசூதியை அதே இடத்தில் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர் தலைவர் அஜ்மல் சரிப் நன்றி கூறினார்.

தொண்டியில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால் தலைமை வகித்தார். பொறுப்பு குழு தலைவர் பட்டானி மீரான் வரவேற்றார். பொறுப்பு குழு நிர்வாகி பாதுஷா, பரக்கத்துல்லா, இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா பேசினார். இதில் தமாகா ரவிசந்திர ராமவன்னி, தமிழ் புலிகள் அமைப்பினர், மார்க்சிஸ்ட், தமுமுக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தங்கச்சிமடம் ஆசிக் நன்றி கூறினார்.

Related Stories: