டெங்கு கொசுப்புழு வளர்த்த 600 பேருக்கு அபராதம்

திருமங்கலம், டிச. 7: திருமங்கலம் நகராட்சியில் சுகாதாரபணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நகரிலுள்ள 27 வார்டுகளிலும் தினசரி நகராட்சி பணியாளர்கள் சென்று வீடுகள், வணிக நிறுவனங்களில் டெங்கு பரப்பும் கொசுக்கள் இருக்கிறனவா என சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்காக தற்போது 60 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பணியாளர்கள் வீடுகளில் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தால் அவற்றை அழித்துவிட்டு வீட்டின் உரிமையாளர், முகவரியை குறித்து வந்து நகராட்சி சுகாதாரத்துறையில் வழங்குவர்.

சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அபராதம் செலுத்த தவறினால் வீட்டிலுள்ள குழாய் இணைப்பு, பாதாளசாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வணிக நிறுவனத்தினர் நகராட்சி அறிவித்த அபராதத்தை செலுத்தி விடுகின்றனர். அபராதத்தை செலுத்த மறுப்பவர்கள் மீது கோர்ட் மூலமாக நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை திருமங்கலம் நகராட்சியில் டெங்கு பரப்பும் கொசுப்புழு வளர்த்த 600 பேருக்கு அபராதமாக ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: