வெளிப்பாளையம் சிவன் சன்னதி தெருவில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று நோய் அபாயம் உடனே அள்ள கோரிக்கை

நாகை.டிச.7: நாகை வெளிப்பாளையம் சிவன் சன்னதி தெருவில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை உடனே அள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை நகராட்சி வெளிப்பாளையம் சிவன் சன்னதி தெருவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சிவன் சன்னதி தெருவில் குப்பைகள் தேங்கியுள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொசு உற்பத்தியும் அதிகம் உள்ளது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாகை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது அந்த பகுதியில்  கொட்டப்பட்ட குப்பை அந்த பகுதி முழுவதும் பரவி கிடக்கிறது.  துர்நாற்றத்தால் அந்த பகுதியில்  வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றாததால் குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் தெற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

உடன் நாகை நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: