30 நாட்களும் பணி நாளாக உத்தரவு பிறப்பிக்க கோரி காரைக்காலில் பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்கால், டிச.7: முப்பது நாட்களும் பணி நாளாக உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி, காரைக்காலில் பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதுச்சேரி மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் பொதுப்பணித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக வவுச்சர் அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் 1,311 பேர் பணியாற்றுகின்றனர். காரைக்காலில் 160 பணியாளர்கள்  பணியில் உள்ளனர்.இவர்களுக்கு மாதத்தில் 16 நாள்கள் மட்டுமே பணி தரப்படுவதாகவும், நாளொன்றுக்கு ரூ.200 வீதம் ரூ.3,200 மட்டுமே ஒரு மாதத்துக்கு கிடைப்பதாகவும், தங்களது பணி நிலையை உயர்த்த வேண்டும், 30 நாட்களும் பணி நாளாக தரும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, காரைக்கால் பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வாயிலில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு பணியாளர் நலக்கூட்டமைப்பு தலைவர் (புதுச்சேரி) சரவணன் தலைமை வகித்தார். போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், அரசுப் பணியில் உள்ள ஒரு பணியாளர் வெறும் ரூ.3,200 பெற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துவது மிகுந்த கஷ்டமாக இருப்பதையும், பல ஆண்டுகளாக ஆளும் அரசிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வருவதாகவும், இதனை நிறைவேற்ற அரசு முன்வராமல்  இருப்பது கண்டிக்கத்தக்கது. குறுகிய காலத்தில் இதன் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பணியாளர் நலக் கூட்டமைப்பில் உள்ள ஊழியர்களும் ஒருங்கிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசு பணியாளர் நலக் கூட்டமைப்பு தலைவர் (புதுச்சேரி) சரவணன் அறிவித்துள்ளார்.

Related Stories: