சீர்காழி கரிக்குளத்தில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

சீர்காழி,டிச.7: சீர்காழி கரிக்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீர்காழி தேர் தெற்கு வீதியில் காந்தி பூங்கா அமைந்துள்ளது.  இந்த பூங்கா மையப்பகுதியில் கரிக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கால போக்கில் கரிகுளத்தில் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் அந்த குளத்தில் கலந்து வருகிறது. இதனால் குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  

குளத்து நீர் மாசு அடைந்து தூர்நாற்றம் வீசி வருகிறது.  இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  குளம் முழுவதும் செடி கொடிகள் மண்டி காணப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி கரிகுளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுத்து குளத்தில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளை அகற்றி தூர்வாரி நல்ல தண்ணீர்  நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: