பாபர்மசூதி இடிப்பு தினம் மயிலாடுதுறையில் தமுமுக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,டிச.7: பாபர்மசூதி இடிப்புதினத்தையொட்டி மயிலாடுதுறையில் சின்னகடைவீதி, முத்துவக்கீல் சாலை ஆகிய இரண்டு ்இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மசூதி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், வாக்குறுதிபடி மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துவக்கீல் சாலையில் தமுமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புகாரி தலைமை வகித்தார். ஜாபர்அலி, உஸ்மான்கான், பாசித், ஷேக்அலாவுதீன், முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல பொறுப்பாளர் வேலுகுபேந்திரன், மீத்தேன் திட்டஎதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதேபோன்று  மயிலாடுதுறை சின்னகடைவீதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சபீக்அகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முகம்மதுஜியாவுதீன், மாவட்ட துணை தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முகம்மதுயூசுப், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்,மாநில செயற்குழு உறுப்பினர் இலியாஸ் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் மாவட்ட செயலாளர்  கமாலூதீன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ரபி நன்றி கூறினார் நாகையில் எஸ்டிபிஐ: நாகையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினத்தை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலைவர் அக்பர் அலி தலைமை தாங்கினார்.  நாகை மாவட்ட தலைவி கலைஹா, மதிமுகவை சேர்ந்த அய்யாபிள்ளை  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட பொது செயலாளர் பாபுகான் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் சபியா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: