கரூரில் கடும் பனிமூட்டம் காலை நேரத்தில் முகப்பு விளக்கு எரியவிட்டு செல்லும் வாகனங்கள்

கரூர், டிச.7: கரூரில் கடும் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளுடன் வாகனங்கள் சென்றன.கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 8மணி வரை பனி நீடிக்கிறது. இதனால் சிறிய சாலைகள் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அனைத்து சாலைகளிலும் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குடன் செல்கின்றன.

காலை 10 மணிக்கு மேல் தான் வெளிச்சம் வருகிறது. நேற்று அவ்வப்போது வெயில் அடித்தது. விட்டு, விட்டு மழை துாறல் விழுந்த வண்ணம் இருந்தது. கரூர் மாவட்டத்தில் 12 மையங்களில் மழை அளவு கணக்கிடப்படுகிறது. நேற்று காலை 8மணிவரை எந்த மையத்திலும் மழை அளவு பதிவாகவில்லை. காவிரியில் மாயனுார் கதவணைக்கு 5,930கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. மாயனுார் கரையில் உள்ள மூன்று வாய்க்கால்களுக்கு 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்டது.காவிரியாற்றில் முக்கொம் புக்கு 4,730 கனஅடிநீர் விடுவிக்கப்பட்டது.

Related Stories: