மணவாசி குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்,டிச.7: மணவாசி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்  மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மணவாசி ஊராட்சியில் சுமார்  3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாயனுார் ஊராட்சி  கீழமாயனுாரில் காவிரியில் 40ஆண்டு களுக்கு முன்னர் கிணறு அமைத்து தரைமட்ட  தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி பழுதாகி உள்ளது.

காவிரியில்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது தொட்டி  நீரில் மூழ்கியது. இதில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால்  மணவாசி பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.  குடிநீர் போதுமான அளவுக்கு வழங்க புதிய கிணறு அமைக்க வேண்டும் என பகுதி  மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுஅளித்துள்ளனர். பஞ்சாயத்து தேர்தலை  நடத்தாதால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண  வேண்டுமானால் ஆற்றில் நடை மேடையுடன் கூடிய புதிய கிணறு அமைக்க வேண்டும்.  உள்ளாட்சி அதிகாரிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி குடிநீர் விநியோகம்  செய்ய வேண்டும் என மணவாசி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: