கஜா புயல் பாதிப்பு மறுவாழ்வுக்கு உதவியின்றி கடவூர் மக்கள் தவிப்பு

கரூர், டிச.7. கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணம் இன்றி கடவூர் மக்கள் தவிக்கின்றனர்.கரூர்  மாவட்டத்தில் கடவூர் ஒன்றியம் கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டது.  கடவூர், முள்ளிப்பாடி, பாலவிடுதி, மாவத்துார், செம்பியநத்தம், கீழப்பகுதி,  ஆதனுார் போன்ற கிராம ங்களில் 800 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்  அடைந்துள்ளன. பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மரங்கள் அழிந்துள்ளன.  50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 668  குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவி வழங்கப் பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், புயல்  பாதிப்புக்கு நிவாரண நிதியாக குடும்பத்திற்கு ரூ.5,780 வழங்கப்பட்டது.  கரூர் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளது. எம்பியும், துணை  சபாநாயகருமான தம்பித்துரை வந்து பார்வை யிட்டு சென்றார். எனினும்  மறுவாழ்வுக்கு எந்த உதவியும் இன்றி தவிக்கிறோம். வீடு மற்றும் பயிர் சேதம்  குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றனர்.

Related Stories: