பள்ளியாடியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும்

நாகர்கோவில், டிச.7: பள்ளியாடி சுற்றுவட்டார பகுதிகளான ஆயன்விளை, குழிவிளை, செக்கிட்டவிளை, வாகவிளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பள்ளியாடி பங்குதந்தை அனலின், காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர். காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், வட்டார தலைவர் ஜெரால்டு கென்னடி, சகோதரிகள் ரீட்டா, பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி  ஆகியோரும் உடனிருந்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளியாடி ஊரில் தொடக்க, உயர்நிலை பள்ளிகள், கோயில்கள், மசூதி, தேவாலயம், பழைய பள்ளி திருத்தலம், வங்கி, மருத்துவமனைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு கல்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மானாங்கண்ணிவிளை என்ற ஊரில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வந்தது. மக்களின் போராட்டத்தால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த மதுபான கடை மூடப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை முன்புள்ள பொது வழிப்பாதை 250 வீடுகளுக்கு மக்கள் செல்ல வேண்டிய பாதையாகும். துமக்கள் இவ்வழியே அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும்போது பல்வேறு பிரச்னைகளை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். பள்ளி செல்லும் மாணவ மாணவியர் பாதிக்கப்படுவர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: