ஊக்கத்தொகை, தையல் இயந்திரம் வழங்காத பயிற்சி நிறுவனம் மீது பெண்கள் புகார்

தஞ்சை,  டிச. 7: தையல் பயிற்சி பெற்ற 61 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் தையல்  இயந்திரம் வழங்காத பயிற்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை  மேற்கு போலீசில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் தையல் பயிற்சி பெற்ற 61 பேர புகார் மனு அளித்தனர். அதில் பிரதம  மந்திரி கவுசல் யோஜனா திட்டத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல்  2018ம் ஆண்டு பிப்ரவரி வரை 61 பேர் தையல் பயிற்சி பெற்றோம். தஞ்சை தெற்கு  வீதியில் காமராஜ் என்பவருக்கு சொந்தமான நெட் சென்டரில் தையல் பயின்ற  நாங்கள் பயிற்சியில் சேரும்போது ஊக்கத்தொகை வழங்கப்படும், தையல் இயந்திரம்  வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் முறைப்படி தேர்வெழுதி  சான்றிதழும் பெற்றுவிட்ட நிலையில் இதுவரை தையல் இயந்திரம் மற்றும்  ஊக்கத்தொகை வழங்கவில்லை. மேலும் ஊக்கத்தொகை, தையல் இயந்திரத்துக்காக  எங்களிடம் ஆதார் நகல், கல்வி சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் பெற்று  கொண்டனர். எனவே உடனடியாக ஊக்கத்தொகை, தையல் இயந்திரத்தை தையல் பயிற்சி  அளித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: