த.வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் உர விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம்

ஜெயங்கொண்டம், டிச. 7: ஜெயங்கொண்டம் வட்டார வேளாண் துறையின் மூலம் வட்டாரத்திலுள்ள உர விற்பனையாளர்களுக்கான பயிற்சி த.வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

பயிற்சிக்கு அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) இளங்கோவன் தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண் அலுவலர் (த.க) சுப்ரமணியன் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.

அனைத்து உர விற்பனையாளர்களும் விவசாயிகளுக்கு அவர்களது மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அளவில் மட்டுமே உரங்களை வழங்க வேண்டும் எனவும், பிஓஎஸ் கருவியை பயன்படுத்தி பில் போடவேண்டும் எனவும் விளக்கினார். மேலும் மக்காச்சோளப் படைப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பரிந்துரைத்து வழங்க வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினார்.பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து உர விற்பனையாளர்களுக்கு விளக்கப்பட்டு அதை அவர்கள் விவசாயிகளிடம் விளக்கி அவர்களை பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார். பயிற்சியில் ஜெயங்கொண்டம் வட்டாரத்திலுள்ள உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

Related Stories: