வணிகவரி அலுவலகம் முன் தேங்கிய கழிவுநீரால் மக்கள் அவதி

திருப்பூர், டிச.7: திருப்பூர் வணிக வரித்துறை அலுவலகம் அருகில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அரசு அதிகாரிகள், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர், குமரன் ரோட்டில் வடக்கு போலீஸ் நிலையம் அருகில் வணிக வரித்துறை அலுவலகம்  செயல்பட்டு வருகிறது. அதனருகில் ஊர்காவல்படை அலுவலகம், மதுவிலக்கு பிரிவு அலுவலகம் , தொடக்கப்பள்ளி ஆசிரியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், குமரன் ரோட்டில் செல்லக்கூடிய சாக்கடை கால்வாய் வடக்கு போலீஸ் நிலையத்துடன் நிறைவடைந்து விடுகிறது. அதை தாண்டி செல்ல வழி இல்லை.

இதனால், வடக்கு போலீஸ் நிலையம் அருகில் தேங்கிய கழிவுநீர், வடிந்து வணிக வரித்துறை அலுவலகம் செல்லும் பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், மேலும், மழை காலங்களில் அரசு அலுவலர்கள் வடக்கு போலீஸ் நிலையம் வழியாக வணிக வரித்துறை அலுவலகம் செல்கின்றனர். இதுகுறித்து, வணிக வரித்துறை அலுவலக அதிகாரிகள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேங்கி கழிவுநீரை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: