நகராட்சி கடைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் கூடுதல் கட்டணம் வசூல்

ஊட்டி, டிச. 7: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் மற்றும் நகரின் பல பகுதிகளில், நகராட்சி சார்பில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுத்து நடத்தி வருபர்களில்,ஒரு சிலர் மட்டுமே நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். 90 சதவீதம் பேர் கடைகளின் முன் பகுதி மற்றும் பக்கவாட்டில் கடைகளை நீட்டிப்பு செய்துவைத்துள்ளனர். சிலர், நடைபாதைககளை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதே சமயம், சிலர் கடைகளின் அளவை அதிகரித்த போதிலும், இதற்கான வாடகை தொகையை நகராட்சிக்கு அவர்கள் ெசலுத்துவதில்லை. மாறாக, அவ்வப்போது சோதனைக்கு வரும் அதிகாரிகளை வியாபாரிகள் சரி கட்டிவிடுகின்றனர். சிலர், ஒன்று முதல் நான்கு கடைகள் வரை வாடகைக்கு எடுத்து, அதனை ஒரே கடையாக மாற்றியுள்ளனர். தனியார் கட்டிடங்களுக்கு இணையாக முன் பகுதியையும், பக்கவாட்டிலும் கூடுதலாக கட்டுமான பணி மேற்கொண்டு பிரமாண்டமாக மாற்றியுள்ளனர்.

இந்நிலையில், நகராட்–்சி நிர்ணயித்த அளவை விட கூடுதலாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு வியாபாரம் செய்து வருபர்களிடம், தற்போது நகராட்சி நிர்வாகம் கூடுதலாக வாடகை கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அளவிடும் பணிகள் நேற்று துவங்கியது. நேற்று ஊட்டி மார்க்கெட் எதிரே உள்ள (பி1 காவல் நிலையம், கமர்சியல் சாலை) கடைகள், கமர்சியல் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் அளவிடும் பணி நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். நகராட்சி நிர்ணயித்துள்ள அளவீடை காட்டிலும், கூடுதலாக ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தால், அதற்குண்டான வாடகை கட்டணம் இனி வியாபாரிகளிடம் இருந்து வசூலிக்கப்படும். மேலும், ஊட்டி மார்க்கெட்டிலும் விரைவில் அளவிடும் பணி துவக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories: