ஆசிரியர் பாலியல் தொல்லை அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்

பாலக்காடு, டிச. 7- கேரள - தமிழக எல்லை கோபாலபுரம் அருகே வண்ணாமடையில் தமிழ் வழிக் கல்வி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 750 க்கும் மேற்பட்ட தமிழ்பேசும் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாணவியர் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவிகள், குழந்தைகள் நலவாரியத்திற்கு புகார் அனுப்பியும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தன. ஆசிரியர் மீது உடனடியாக கைது செய்ய செய்ய பெற்றோர் வலியுறுத்தினர். அதே நேரம் தேர்வு நெருங்கி வரும் வேளையில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு வகுப்புகளுக்கு வராததால் தங்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளதால் உடனடியாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவ, மாணவியர் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செவிசாய்க்காததால் ஆத்திரமடைந்த  நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று கோபாலபுரம்-கொழிஞ்சாம்பாறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், பள்ளி நுழைவுவாயில் முன்பாக மாணவர்கள் அமர்ந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் திரண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கொழிஞ்சாம்பாறை போலீஸ் எஸ்.ஐ., மனோஜ்கோபி தலைமையில் போலீசார் மாணவ, மாணவியர்களிடம் பே்ச்சு நடத்தினர்.  ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அளித்த உறுதி மொழியை ஏற்று மாணவ, மாணவியர் பெற்றோருடன் கலைந்து சென்றனர்.

Related Stories: