விஏஓக்கள் விடிய விடிய தர்ணா

சாத்தான்குளம், டிச.6:  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும் கிராம நிர்வாக அலுவலக கல்வி தகுதியை பட்ட படிப்பாக மாற்ற வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பு ஊதியம் மீண்டும் வழங்க வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயனுள்ள கணினி, இணைய தளவசதியை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  9அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சாத்தான்குளம் வட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் நேற்று இரவு விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்துக்கு சங்க வட்டத் தலைவர் சுரேஷ்ராஜா தலைமை வகித்தார். இதில் செயலர் செந்தில்முருகன், பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் கந்தவள்ளிக்குமார் உள்ளிட்ட 18 பேர்இப்போராட்டத்தி–்ல் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி: கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று இரவு நடந்த தர்ணாவிற்கு சங்க வட்ட தலைவர் அமர்ராஜ் தலைமை வகித்தார். சங்க வட்ட செயலாளர் மந்திரசூடாமணி முன்னிலை வகித்தார். தர்ணாவில் கோவில்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட 34 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.    கயத்தாறு: கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நேற்று இரவு கிராம நிர்வாக அலுவலர்கள்  தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தலைவர் நெல்லையப்பன் தலைமை வகித்தார். பொருளாளர் கல்யாணகுமார், செயலாளர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: