கனகமூலம் குடியிருப்பு அய்யா வைகுண்டர் திருப்பதி திருவிழா

நாகர்கோவில், டிச.7: கனகமூலம் குடியிருப்பு அய்யா வைகுண்டர் திருப்பதி திருவிழா இன்று (7ம் ேததி) காலை  6 மணிக்கு பால் பணிவிடை உகபடிப்புடன் தொடங்குகிறது. 6.30 மணிக்கு திருநாம கொடியேற்றம் நடைபெறுகிறது. வருகிற 17ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு தினசரி காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 4.30 மணிக்கு  பணிவிடை உகபடிப்பும், மதியம் ஒரு மணிக்கு பால் தர்மமும், மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 9 மணிக்கு இனிமம் வழங்குதலும் நடைபெறுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்ைப வசந்தகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார். 8ம் திருநாளன்று இரவு 9.30 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா பதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

 இதனை விஜயகுமார் எம்.பி தொடங்கி வைக்கிறார். 10ம் திருநாளன்று இரவு 7 மணிக்கு இந்திர வாகன ஊர்வலம் நடக்கிறது. இதனை ஆஸ்டின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார். 9ம் திருநாளன்று  மாைல 5 மணிக்கு எகனை திருக்கல்யாண  திருஏடு வாசிப்பும், இரவு 9 மணிக்கு திருக்கல்யாண திருஏடுவாசிப்பும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.  10ம் திருநாளன்று இரவு 8 மணிக்கு  வாணவேடிக்கை, 9 மணிக்கு அன்ன தர்மம் நடைபெறுகிறது. 17ம் தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பணிவிடை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் பொன் பழனிவேல், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: