சட்ட விழிப்புணர்வு முகாமில் மக்கள் மனு

உத்திரமேரூர், டிச.7:உத்திரமேரூர் அடுத்த நாஞ்சிபுரம் கிராமத்தில் உத்திரமேரூர் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் சர்வோ டிரஸ்ட் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமில் வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவரும் உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான சச்சிதானந்தம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் இருளர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களில் சட்ட விரோதமாக நடத்தப்படும் குழந்தை திருமணங்கள் தவிர்த்திட வேண்டும். குடும்ப வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சட்ட உதவிகள் அதை பெறுவதன் வழிமுறைகள் வரதட்சணை கொடுமைகளுக்கு சட்ட உதவிகள் நாடுவது பெண்களின் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் கடமைகள் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசின் திட்டங்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நாஞ்சிபுரம் கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நீதிபதியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்த்தி, ஜானகிராமன், ரவிச்சந்திரன் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: