வள்ளுவன் பயிற்சி மையத்தில் குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

சென்னை, டிச. 7: தமிழகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் காஞ்சி வள்ளுவன் பயிற்சி மையத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு, குறுகிய காலத்திலேயே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, குரூப் 2 மற்றும் குரூப்-4 தேர்வு மூலம், மொத்தம் 17,000 பேரை வரும் 2019ம் ஆண்டுக்குள் பணியமர்த்த இருப்பதாக தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. மாணவர்களை இத்தேர்வுக்காக தயார்படுத்தும் விதமாக 6 மாத கால பயிற்சி அளித்து, அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல நாளை (8ம் தேதி) முதல் காலை 9 மணி முதல் காஞ்சிளள வள்ளுவன் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் மூலம் பயிற்சி வகுப்புகள் துவங்க இருக்கின்றன. கடந்த மாதம் நடந்து முடிந்த குரூப் -2 முதல்நிலை தேர்வில் 140க்கு சரியாக விடையளித்த மாணவர்கள் அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பயிற்சி வகுப்புகள் நாளை துவங்க உள்ளது.

மணிகண்டன் ஐஏஎஸ் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இன்று முதல் பயிற்சியில் சேர முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு 50% ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு காலம் இன்று துவங்கி வரும் 9ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.வெளியூர் மாணவர்களுக்கு தங்கி பயிலும் வசதியும் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், முன்பதிவுக்கு  space  என டைப் செய்து 9952809908 என்ற செல்போன் எண்ணிக்கு எஸ்எம்எஸ் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என இப்பயிற்சி மைய நிர்வாக அதிகாரி நரேஷ் குமார் தெரிவித்தார். பயிற்சி நடைபெறும் இடம்: காஞ்சி வள்ளுவன் டிஎன்பிசி பயிற்சி மையம், கவரைத்தெரு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி பின்புறம், காஞ்சிபுரம் - 631501, இதன் கிளைகள் காஞ்சிபுரம், சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிறது. மேலும், விவரங்களுக்கு 9952809908 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Related Stories: