மாமல்லபுரத்தில் சிற்பக்கலை மாணவர்களுக்கு சிற்பம் வடிவமைக்கும் போட்டி

மாமல்லபுரம், டிச.7:  தமிழக அரசின் கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரி மாணவர் களுக்கு அடுத்த தலைமுறை கைவினைஞர்களுக்கான சிற்பம் வடிவமைக்கும் போட்டி நடத்தப்பட்டது. மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த போட்டியில் கற்சிற்பம், மரச்சிற்பம், சுதை சிற்பம், உலோக சிற்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

மத்திய அரசின் லலித்கலா அகாடமி விருது பெற்ற சிற்பக்கலைஞர் த.பாஸ்கரன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இன்றும் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

Related Stories: