வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத 50 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்

வேலூர், டிச.7: வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத 50 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தார். வேலூர் மாநகராட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அதோடு வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவம், கல்வி, தொழில் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வேலூர் வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதோடு வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் தொழில்காரணமாக வேலூர் வந்து மாநகராட்சி பகுதிகளிலேயே குடியேறிவிடுகின்றனர்.

இதனால் ஏராளமான வணிக வளாகங்கள், குடியிருப்புகள் என்று கட்டப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களிலும் அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் 50 கட்டிடங்கள் வரையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கட்டிடங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: