குறி சொல்வதாகக் கூறி பெண்ணிடம் 12 சவரன், 6 லட்சம் அபகரிப்பு

காஞ்சிபுரம், டிச.7:  காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுராந்தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி மல்லிகா (52). இவர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மகளும் இவருடன் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பொய்யாகுளத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் தினேஷ் (18 ) என்பவர் அவரது நண்பர் மூலம் பழக்கடைக்கு வந்து போனதில் மல்லிகாவுக்கு அறிமுகம் ஆகி உள்ளார். எனவே, தினேஷிடம் மல்லிகா, கடை வியாபாரம் சரியில்லை, உடம்பு அடிக்கடி சரியில்லாமல் போகிறது என்று தெரிவித்துள்ளார். அதற்கு தினேஷ் குறிபார்த்துச் சொல்வதாகவும் அதற்கு கொஞ்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி மல்லிகா வைத்திருந்த 12 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 6 லட்சத்தை கடந்த 2 மாதங்களாக சிறுகச் சிறுக வாங்கியுள்ளார். திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் மல்லிகா திருப்பிக் கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, மல்லிகா சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் பொய்யாகுளம் தினேஷைக் கைது செய்து அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: