தேனி அருகே உப்புக்கோட்டையில் பள்ளி அருகே தேங்கும் கழிவுநீர் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்

தேனி, டிச. 6: தேனி அருகே உப்புக்கோட்டையில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே கால்வாயில் கழிவுநீர் தேங்கி பாசம் படிந்துள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தேனி அருகே உப்புக்கோட்டை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வடக்குத் தெருவில் ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கியுள்ளது. இதனால் இக்கழிவுநீர் பாசி படர்ந்துள்ளது. மேலும், கால்வாய் கழிவுநீர் பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி செல்லும் நிலையில் கழிவு நீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது.  இதனால், இக்கால்வாயில் கொசுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்த கொசுக்களால் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் போன்ற தொந்தரவு ஏற்பட்டு வருகிறது.

சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் உள்ளதால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். எனவே, கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக உள்ள கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: