தாலுகா அலுவலகத்தில் விஏஓக்கள் இரவில் தர்ணா போராட்டம்

நாமக்கல், டிச.6: நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நேற்று இரவு கிராம நிர்வாக அலுவலர்கள், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்  தாலுகா அலுவலகத்தில், நேற்று இரவு 7 மணியளவில், தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட  செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, மாவட்ட  மாறுதல் ஒரே அரசாணையின் மூலம் வழங்குதல், விஏஓ பணியிடங்களை மறு சீரமைப்பு  செய்ய கோருதல், விஏஓ அலுவலகங்களுக்கு மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை  வசதிகள் ஏற்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.  

கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, ஏற்கனவே  வழங்கப்பட்டு வந்த கூடுதல் பொறுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கவேண்டும் போன்ற  கோரிக்கையை வலியுறுத்தி, இந்த தர்ணா நடைபெற்றது. இதில் 50க்கும்  மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  அலுவலகத்திலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதேபோல்  ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்க வட்டாரத் தலைவர் வரதராஜன் தலைமையில்  10க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

Related Stories: