பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாமக்கல், டிச.6: நாமக்கல்லில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணியை, கலெக்டர் ஆசியாமரியம் தொடங்கி வைத்தார். அப்போது, பொதுமக்களுக்கு துணிப்பைகளையும், விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் வழங்கினார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுச்சூழலை காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர் ஏந்திச்சென்றனர்.

இந்த பேரணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி ஆணையாளர் (பொ) கமலநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், கிருஷ்ணன், குணசேகரன், ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், விவேகானந்தா நர்சிங் கல்லூரி மாணவிகள், கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர்கள் மற்றும் செல்வம் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: