தண்ணீரின்றி கருகும் தென்னை மரங்கள்

தர்மபுரி, டிச.6:தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் போதிய அளவில் பருவமழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் 300 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் தற்ேபாது, 600 அடிக்கும் அதிகமாக போர் போட்டால் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்றதால், போதிய தண்ணீர் இல்லாமல் தடங்கம் கிராமம், தோக்கம்பட்டி, பெருமாள்கோயில்மேடு பகுதிகளில் தென்னை மரங்கள் கருகி வருகிறது. ஒருசில தென்னை மரங்கள் காய்ந்து மொட்டையாகி நிற்கின்றன. இதனால் தென்னையை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஓராண்டாக போதிய பருவமழை இல்லாததால், தென்னை மரங்கள் கருகிய நிலையில் உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Related Stories: