கோமாரி நோய் தடுக்க மாட்டு சந்தைகளுக்கு டிச.31ம் தேதி வரை தடை

தர்மபுரி, டிச.6: தர்மபுரி மாவட்டத்தில் கோமாரி நோய் பரவுவதை தடுக்க, மாட்டு சந்தை இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை:  தர்மபுரி மாவட்டத்தில் தற்போது குளிர் மற்றும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கால்நடைகளுக்கு கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய்நோய் ஏற்படுதல் மற்றும் பரவுதலை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகள் கூடுவதை கட்டுப்படுத்தவும், நோயுற்ற கால்நடைகளை அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதை தடுக்கவும், நோயுற்ற கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி,  பென்னாகரம், ஏரியூர், மாரண்டஅள்ளி, எச்.கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பி.மல்லாபுரம், கடத்தூர் ஆகிய கால்நடை வாரச்சந்தைகள், டிசம்பர் 31ம் தேதி வரை தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: