போக்குவரத்து விதி மீறிய 128 வாகன ஓட்டிகளுக்கு ₹2.47 லட்சம் அபராதம்

அரூர், டிச.6:  அரூர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 128 வாகன ஓட்டிகளிடம் ₹2.47லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், அரூர் பைபாஸ் சாலை, தர்மபுரி,  கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் உள்ளிட்ட பகுதியில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டார். நவம்பர் மாதத்தில் 1,075 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது சரக்கு வாகனத்தில், ஆட்கள் ஏற்றி வந்தது. உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி சரக்கு வாகனம், அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆம்னி பஸ்கள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 128வாகன ஓட்டிகளுக்கு ₹2லட்சத்து 47ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிக ஆட்களை ஏற்றி 16 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 45ஆம்னிபஸ் தணிக்கை செய்யப்பட்டது, மேலும் அதிக பாரம், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர், தலைகவசம் அணியாதவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு 25 மாத காலத்திற்கும், அதே போல் 12 வாகன ஓட்டுநர்களுக்கு 6 மாதத்திற்கும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: